Sunday, March 31, 2024

திமுக -இரு பக்கங்கள்.

 திமுக என்ற கட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது.

ஒன்று அதிகாரத்தால் கோடீஸ்வரர்களாகி ” குறுநில மன்னர்கள் “போல்  இருப்போர் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் – கட்சி- கொள்கை- கரைவேட்டி- தலைவர் என்று கூறிக் கொண்டே வாழ்க்கை முழுவதும், தான் இருந்த இடத்திலிருந்து சற்றும் உயர்வை நோக்கி நகராமல், டீயோடும், பண்ணோடும் இருப்போர்.

பவா சமத்துவன்

Wednesday, February 28, 2024

கொண்டாடுங்கள்!

  வாழ்க்கையில் உங்களுடன் கூட இருக்கும்  

 போதே மதிப்பளியுங்கள்,கொண்டாடுங்கள் .

கால ஒட்டத்தில்,  ஒரு நாள் நீங்கள் உணரும் பொழுதுகளில் அவர்கள் உங்களுடன்

இல்லாமல் போய் இருக்கலாம் . அந்த தருணங்களில்

 கழிவிரக்கம் ,குற்றஉணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக 

கொன்று கொண்டு இருக்கும் . எனவே இருக்கும் பொழுதுகளிலே கொண்டாடுங்கள் . 

   


Tuesday, November 28, 2023

கனேடியர்களின் ஆயுட்காலம்.

 

கனடிய மக்களது ஆயுட் காலம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவின் மக்களது ஆயுட்காலமானது குறைவடைந்து செல்லும் போக்கினை காட்டி உள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக கனடிய  புள்ளி விபர தி  ணைக்களம் தெரிவித்து உள்ளது.


கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது.

புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்று காரணமாகவும் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Thursday, August 31, 2023

தர்மன் சண்முகரத்தினம்.. சிங்கப்பூர் அதிபர் ஆவாரா?

 சிங்கையில் நாளை நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில்  இலங்கை தமிழ்  வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினத்த்துக்கு  அதிபராக ,அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன .இது சாத்தியமானால் இலங்கைக்கு வெளியே ஒரு  உயர் பதவியில் அமரும் ஈழத் தமிழர் என்ற பெருமை

தர்மன் அவர்களுக்கு கிடைக்கும் . பெரும்பாலும் அவருக்கு வெற்றி நிச்சயம் என்றே தெரிகிறது.இதனால் எங்களுக்கு ஏதாவது பயன் உண்டா ,என்றால் , பெருமை மட்டும் தான் .அவ்வளவு தான் ..அதற்கு மேல் அவரால் ஏதும் செய்ய முடியாது..

நாங்களும் அதிகம் எதிர் பாராமல் எங்கள் பிழைப்பை பார்ப்போம்.


Monday, July 10, 2023

மாமனிதன் - வலி சொன்னானா?

 அண்மையில் பார்த்த படம் மாமனிதன் .திரைக்கு வந்து சில நாட்களே  ஆன இந்த படத்தினை வீட்டில்  இருந்தே பார்க்க முடிந்தது .. ஒரு படத்தை இவ்வளவு விரைவாக பார்த்தது இந்த முறைதான் என்று நினைக்கிறேன் .மாரி செல்வராஜின் கடந்த கால படங்களும், வடிவேலுவும் தான் இதற்கு காரணம் ...

மாறே  செல்வராஜின் இந்த படம்  பழைய அவரின் படங்களை போலவே ஒடுக்கப்பட்டவர்களின்   வலிகளை சொல்லும் ஒரு படமாக வந்து இருக்கிறது ...

அவரின் பழைய படங்கள் போலவே குறியீடுகளும் இங்கு உண்டு.. பன்றி வளர்க்கும் ஒரு எம்.எல்.எ  பையனை , பெரும்பாலான  காட்சிகளில் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் ஒரு எம் எல் .ஏ வை பார்ப்பது  என்பது  சராசரி தமிழ் படங்களை  பார்க்கும் யாருக்கும் புதிதாகவே இருக்கும் 


சாதிகளின் பெருமைகளை சொல்லும் பல படங்களை  சத்தமே இல்லாமல் பார்த்து ரசித்த பலரால் ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை சொல்லும் இப்படத்தை பார்க்க முடியவில்லை ,ஏற்றுக்கொள்ள முடியவில்லை  என்பது  அங்கங்கே காணும் காட்சி  ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது ..


வடிவேலு முன்னர் பார்த்த பரிணாமம் வேறு இப்படத்தில் அவர் எடுத்து இருக்கும் பரிணாமம் வேறு ,தமிழ் கூறும்   நல்லுலகுக்கு ஒரு குணச்சித்திர நடிகர் கிடைத்து  இருக்கிறார் ..அதை தமிழ் திரை உலகம்  பயன்படுத்துமா?

வடிவேலு ஒரு நல்ல ஒரு நடிகர் , பிறவிக் கலைஞன் .ஆனால்  நல்ல மனிதனா  என்றால் அது வேறு விடயம் .. வடிவேலு மட்டுமல்ல இன்னமும் சிலர்  இப்படி தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள்  இதே தகுதிகளோடு ..


படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அப்படியே மனதில் தைக்க கூடிய மாதிரி இருந்தன...நடிப்பில் பகத் பாசிலுக்கும் வடிவேலுவுக்கும் தான் போட்டியே .. உதயநிதி வருகிறார் போகிறார் ,கீர்த்தி சுரேசும் ஏனோதானோ என்று வந்து போகிறார் .

இந்த கதையில் உதயநிதியின் இடத்தில்  தனுஷ் நடித்து இருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும் .அவருக்காகவே எழுதியது என்றும் அவர் நடிக்க   மறுத்து  விடடார்  என்றும்  ஒரு தகவல் .






Wednesday, June 21, 2023

தயவு செய்து இதை படிக்காதீர்கள் ....!

 நோரா வின்சென்ட்


இவர் ஒரு லெஸ்பியன் பெண். பெண்ணியவாதி. பத்திரிக்கை நிருபர்.


ஆனால் இவருக்கு ஆண்களின் உலகம் மேல் ஒரு கியூரியாசிட்டி இருந்துகொண்டே இருந்தது. ஆண்களை பெண்கள் கண்ணோட்டத்தில் மட்டுமே அறிந்து இருக்கிறோம். ஆனால் ஒரு சக ஆணாக, ஆண்களுடன் பழகினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டார். நாம் நினைப்பது போல் ஆண்கள் அத்தனை மோசமானவர்களா என்ன?


அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை மாற்றிக்கொண்டு 18 மாதம் முழு ஆண் மேக்கப்பில் வாழ்ந்தார். ஆண்கள் மட்டுமே இருக்கும் பவுலிங் கிளப்பில் உறுப்பினர் ஆனார். ஸ்ட்ரிப் கிளப்புக்கு போனார். கத்தோலிக்க பாதிரியாராக கூட ஆனார். கடைசிக்கு ஆண் வேடத்தில் ஒரு பெண்ணையும் காதலித்தார்


அந்த அனுபவங்களை தொகுத்து "self-made man" எனும் நூலாக எழுதினார்.


பவுலிங் கிளப்புக்கு சென்ற அனுபவத்தை கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்


"ஆண்கள் மிக கடுமையாக போட்டிபோடுவார்கள் என நினைத்தேன். அந்த பவுலிங் கிளப்பில் போட்டி மிக கடுமையானது. பணம் கட்டி எல்லாம் ஆடுவார்கள். அத்தனை கடுமையான போட்டி நடக்கும் இடத்திலும், என்னிடம் தோற்றால் பணத்தை இழக்கவேண்டி வரும் என்ற சூழலிலும் எனக்கு சரியாக பவுலிங் வராது என தெரிந்தவுடன் அவர்கள் என்னிடம் மிக தன்மையாக நடந்துகொண்டார்கள். எனக்கு பந்தை எப்படி பிடித்து பவுலிங் செய்ய வேண்டும் என என்னிடம் போட்டி போட்டவர்களே கற்றுக்கொடுத்தார்கள். ஆண்கள் என்றால் ஈவு இரக்க்மில்லாமல் போட்டியிடுவார்கள் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது...


தனக்கு சமமான போட்டியாளனாக நான் இல்லை என உணர்ந்தவுடன் அவர்கள் குரு ஸ்தானத்துக்கு மாறி எனக்கு விளையாட்டை கற்றுக்கொடுத்தார்கள். பெண்களிடம் இந்த தன்மையை நான் பார்த்தது இல்லை.."


பவுலிங் நடக்கும் இடத்துக்கு ஒரு தந்தை தன் மகனை கூட்டி வந்தார். ஒட்டுமொத்தமாக அனைத்து ஆண்களும் அவனை ஊக்குவித்து, பவுலிங் கற்றுக்கொடுத்தார்கள். தன் சொந்த மகனை போல நடத்தினார்கள்....."


ஆனால் அனைத்தையும் விட வியப்பளிக்கும் விசயம்....அவர்களிடம் இருக்கும் சப்போர்ட் முறைதான். ஆண்கள் அதிகமாக உணர்ச்சியை வெளிகாட்டுவதில்லை. தன் தாய் கான்சரில் இறந்ததை ஒரு ஆண் என்னிடம் வெறும் 20 வார்த்தைகளில் சொன்னார்.


ஆனால் அவர்களின் நண்பர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். நினைத்து பார்க்கமுடியாத அளவு ஒற்றுமையுடன் பிரச்சனையை சரி செய்கிறார்கள். அவர்கள் மத்தியில் இருக்கும் நட்பு மிக ஆழமானது ஆகும். ஆனால் வார்த்தைகளில் அதை வெளிப்படுத்திக்கொள்வதில்லை..."


18 மாத அனுபவத்துக்கு பின் அவரது கருத்துக்களில் என்ன மாற்றம் ஏற்பட்டது?


"பெண்ணாக இருப்பதில் எத்தனை சலுகை இருக்கிறது என்பதை இப்போது தான் உணர்கிறேன். ஆணாக  இருப்பது மிக கஷ்டமான விஷயம். ஆண்கள் நம் எதிரிகள் அல்ல. அன்புக்கு உரியவர்கள். நம் பரிவுக்கு உரியவர்கள்..."


படித்ததில் பிடித்தது ,,,, மீண்டும் சந்திப்போம் ...

Sunday, June 11, 2023

களி தின்பாரா பெரியண்ணன்?

 மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ட் மீண்டும் 

தேர்தலில் போட்டி போடும் முயற்சியில் இருந்த போதுதான் 

பாலியல் நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு எழுத்து அவர் மேல்

குற்ற வழக்கு பதியப்பட்டது .இப்போது முக்கியமான அரசு  ஆவணங்களை 

அவரது வீட்டுக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு 

எழுந்த நிலையில், இப்போது அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 

இருக்கிறது.குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 

நூறு ஆண்டுகள் வரையில்  சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


பெரியண்ணன் களி  சாப்பிட போவாரா? அல்லது மீண்டும் ஜனாதிபதியாக 

வருவாரா காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . பதில் கிடைக்கும் 

வரை பொறுத்து இருப்போம்....